Cinema News
தலைப்புலயே ப்ளாப் ஆன விஜய்! கட்சி பெயரை செலக்ட் செஞ்சதே இவர்தானாம்.. விளங்குமா கட்சி?
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் மற்றும் பண்டிகை என்றால் அது விஜயின் படங்களின் ரிலீஸ் தான். விஜயின் ஒவ்வொரு படமும் ரிலீஸாகும் போதெல்லாம் ரசிகர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
இந்த நிலையில் இனிமேல் சினிமாவில் நடிக்க போவது இல்லை என்றும் முழு நேர அரசியலில் என் கவனத்தை செலுத்தப் போகிறேன் என்றும் நேற்று விஜய் அறிவித்ததில் இருந்து மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிவாஜி பட இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!. அதுவும் நடக்காம போச்சே!..
அதிலும் மிகவும் உச்சத்தில் இருக்கும் போதே இப்படி ஒரு முடிவை விஜய் எடுத்திருப்பது அவருடைய ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் விஜயின் அரசியல் வருகை குறித்தும் அவரது கட்சியின் பெயரை குறித்தும் சில தகவல்களை கூறினார்.
அதாவது தலைப்பிலேயே ப்ளாப் ஆன கட்சி விஜய் கட்சி என்று சொல்லலாம். கட்சியின் பெயரிலேயே அவர் என்ன சொல்ல வருகிறார்? என்ன கொள்கையை வலியுறுத்திகிறார் என்றெல்லாம் தெரியவேண்டும்.
இதையும் படிங்க: ஒரு துளி கூட ஆசை இல்ல.. அப்போ ஒரு முடிவோடதான் வந்திருக்காரு.. வைரலாகும் விஜயின் வீடியோ
அதென்ன தமிழக வெற்றி கழகம்? நாளைக்கு ஒரு வேளை கட்சி தோற்றுவிட்டால் பெயரிலிருந்து வெற்றியை தூக்கி விடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் அந்தனன். திராவிட முனேற்றக் கழகம், மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மையம் என்ற பெயரை பாருங்கள். கட்சியின் பெயரிலேயே ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். ஆனால் விஜய் கட்சி பெயரில்?
அதுமட்டுமில்லாமல் விஜயிடம் ஒரு 50 தலைப்புகளை எழுதி கொடுத்தாராம் புஸ்ஸீ ஆனந்த். அவருடைய ஆலோசனையை மட்டும் வைத்து கட்சியை நடத்துவது சரியா? எத்தனை நிர்வாகிகள் இருக்கிறார்கள்? அவர்களுடனும் கட்சியின் பெயரை வைத்து ஆலோசித்து வெளியிட்டிருக்கலாம் என்று அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: உடைந்த ரோகினி ரகசியம்!… இந்த அண்ணாமலை யாரு பக்கம் தான் இருக்காரு!…