Cinema News
செம்பு தூக்கியாவே மாத்திட்டானுங்க! மிஷ்கினை வச்சு செய்யும் நெட்டிசன்கள் – 2040ல் இப்படியா இருப்பாரு?
Actor Mysskin: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவே மாறி வருகிறார் மிஷ்கின். இயக்குனராக மக்கள் இவரை ரசித்ததை விட ஒரு நடிகராகத்தான் மிஷ்கினை ரசிக்கிறார்கள். அந்தளவுக்கு படங்களில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த லியோ திரைப்படத்திலும் தனது வில்லத்தனத்தை காட்டி மிரளவைத்தார். ரசிக்கும் படியாக இருந்தது.இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற லியோ வெற்றிவிழாவில் மிஷ்கின் பேசிய பேச்சை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: சாவித்திரி ஆசை ஆசையாய் கொடுத்த உப்புமா… கீழே துப்பிய கமல்…!
எப்படி ரஜினிக்கு கலாநிதி மாறனோ அதே போல் விஜய்க்கு மிஷ்கின் என கூறிவருகிறார்கள். அந்தளவுக்கு விஜயை ஐஸில் மிதக்க வைத்திருப்பார் மிஷ்கின். யூத் படத்தின் மூலம் விஜயுடன் இணைந்த மிஷ்கின் அதன் பிறகு இந்த லியோ படத்தில் தான் விஜயுடன் நடித்திருக்கிறார்.
விஜய் கூட இருக்கும் போது எப்படி சாக முடியும்? வாழதான் முடியும் எனஓவர் புகழ்ச்சியில் அரங்கத்தை அதிர வைத்த மிஷ்கின் 2040 ஆம் ஆண்டு எப்படி இருப்பார் என்பதையும் அந்த நேரத்திலும் விஜயை எப்படி புகழ்ந்து பேசுவார் என்பதையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கிண்டலடித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் நடிப்பை பார்த்து நக்கலடித்த இயக்குனர்!.. நொறுங்கிப்போன பொன்மன செம்மல்!..
அதாவது ‘எனது வாழ்க்கையில் சிறகுகளை விரிக்க வைத்து வானில் பறக்கவைத்து இரத்தத்தை தெறிக்க வைத்த படம்னா அது லியோ படம்தான். அந்தக் காலத்துல லியோவை ரெண்டாயிரம் தடவை பார்த்திருப்பேன். இன்னும் மூவாயிரம் தடவை பார்ப்பேன். உலக அதிசயங்களில் லியோ எட்டாவது அதிசயம். தற்போதுள்ள முதல்வர் Badass விஜயை ஒரு ஜென் குருவாகத்தான் பார்க்கிறேன். நன்றி சாக்லேட் காப்பி, தெறிக்க’ என இப்படித்தான் பேசியிருப்பார் என நெட்டிசன்களே தங்கள் இஷ்டத்துக்கு கதைகளை எழுதி மிஷ்கினை வச்சு செய்து வருகிறார்கள்.