Connect with us
MR Radha

Cinema History

நடிகவேள்.. நாடகத்தை சீக்கிரம் போடு!. கத்திய ரசிகர்கள்!.. கடுப்பாகி எம்.ஆர்.ராதா என்ன செய்தார் தெரியுமா?…

MR Radha: பல வருட நாடக அனுபவத்தை பெற்றவர் எம்.ஆர்.ராதா. அவருக்கு சினிமாவில் நடிப்பதை விட நாடகத்தில் நடிப்பது அதிகம் பிடிக்கும். ஏனெனில், தான் விரும்பியது போல் நடிப்பதற்கும், விரும்பிய வசனங்களை பேசுவதற்கும் நாடகத்தில் அவருக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், அவர் பணம் சம்பாதித்தது சினிமாவில்தான்.

அவர் நடிப்பில் வெளியான ரத்தக் கண்ணீர் திரைப்படம் அப்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இதுவும் நாடகமாக உருவாகி பின்னர் சினிமாவாக எடுக்கப்பட்டது. பல கண்டிஷன்களை போட்டுத்தான் எம்.ஆர்.ராதா அதில் நடித்தார். சமூகவலைத்தளங்களில் இப்போதும் இப்படத்தின் காட்சிகள் யாரோ ஒரு ரசிகர் பதிவிட்டு வருகிறார் என்றால் அதற்கு காரணம் அந்த படம் உருவாக்கிய தாக்கம்தான்.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா நாடகத்தை படமாக்கும் போது நடிகவேளை ஓரங்கட்டிய என்.எஸ்.கே – விளைவு என்ன தெரியுமா?..

கடவுள் நம்பிக்கை இல்லாத, பகுத்தறிவுவாதியான எம்.ஆர்.ராதா அவர் நடித்த பல திரைப்படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பேசி நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் காமெடி, குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி என பல நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்கும்போதே நாடகங்களிலும் நடிப்பார். இவரின் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பேசும் வசனங்கள் எப்போதும் சர்ச்சையை கிளப்பும். அதேநேரம் அந்த வசனங்கள் ரசிகர்களிடம் கைத்தட்டலை பெறும். அதேபோல், எம்.ஆர்.ராதா யாருக்கும் பயப்பட மாட்டார். தன் கருத்திலிருந்து பின்வாங்க மாட்டார். நடிகர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கிறார்கள். அது அவர்களின் தொழில். அவர்களுக்கு பெரிய முக்கியத்துவத்தை கொடுக்கக்கூடாது என பல வருடங்களுக்கு முன்பே சொன்னவர் எம்.ஆர்.ராதா.

இதையும் படிங்க: கஷ்டத்தில் சிக்கிய சிவாஜி… எம்.ஆர்.ராதாவால் மீண்ட பின்னணி.. அட என்ன திறமைசாலிப்பா இவரு?

ஒருமுறை அவரின் நாடகம் 6.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், டிக்கெட்டுகள் எல்லாம் விற்று ரசிகர்கள் நாடக அரங்கில் நாடகத்தை உடனே போடுங்கள் என கத்திக்கொண்டிருந்தனர். எம்.ஆர்.ராதா அப்போதுதான் வந்தார். அவர் எப்போதும் தன்னுடையை நாயை உடனே அழைத்து வருவார். மணி அப்போது 6.10 தான் ஆகியிருந்தது. உடனே அந்த நாயை மேடைக்கு அழைத்து சென்றார். கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வைத்திருந்தார்.

ஆனால், அதை நாய்க்கு போடவில்லை. இதனால் நாய் ‘லொள் லொள்’ என குரைத்ததது. உடனே எம்.ஆர்.ராதா ‘ஆறரை மணிக்குதான் போடுவேன்னு சொன்னேன். இப்படி கத்தினா 6 மணிக்கே போட்ருவனா?’ என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். ஆனாலும், எம்.ஆர்.ராதாவின் அந்த சாதுர்யத்தை ரசிகர்கள் ரசித்தனர். அறிவித்தபடி ஆறரை மணிக்கு நாடகத்தை துவங்கினார்.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா-வுக்கு எதுவும் ஆகக்கூடாது!. வேண்டிக்கொண்ட எம்.ஜி.ஆர். அந்த மனசுதான் கடவுள்

google news
Continue Reading

More in Cinema History

To Top