மாஸ் கம்பேக் கொடுக்கும் சமந்தா! ட்ரெண்டாகும் தஸ்ஸாடியா முதல் சிங்கிள்

தென்னிந்திய திரஒயுலகில் முக்கிய நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். குஷி படத்திற்கு பின் நீண்ட நாட்களாக புதிய படம் எதிலும் நடிக்காமல் இருந்தார். இப்போது அவரது ரசிகர்களை திருப்திபடுத்த

Maa Inti Bangaram

தென்னிந்திய திரஒயுலகில் முக்கிய நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். குஷி படத்திற்கு பின் நீண்ட நாட்களாக புதிய படம் எதிலும் நடிக்காமல் இருந்தார். இப்போது அவரது ரசிகர்களை திருப்திபடுத்த மீண்டும் அதிரடியாக களம் இறங்கும் திரைப்படம்தான் மா இண்டி பங்காரம். ஓபேபி வெற்றி படத்திற்கு பிறகு இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் சமந்தா மீண்டும் இப்படத்தில் இணைகிறார்.

இப்படத்தில் சமந்தாவுடன் கன்னட நடிகர் நடிகர் திகந்த், கௌதமி, மஞ்சுஷா, ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை சமந்தா தனது டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். ஏற்கெனவே இந்த நிறுவனம் மூலம் சுபம் என்ற படத்தை தயாரித்திருந்தார். இது அவரது இரண்டாவது சொந்த படமகும்.

இந்த நிலையில் மா இண்டி பங்காரம் படத்தின் முதல் சிங்கிளான தஸ்ஸாடியா என்ர பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒரு குடும்பத்தின் திருமண கொண்டாட்டத்தை மையமாக வைத்து இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாரம்பரியமான சேலையில் சமந்தாவின் நடனம் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. இப்படம் வரும் மே 15, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →