பிரசாந்த் -ஹரி படம் ட்ராப் ஆக என்ன காரணம் தெரியுமா?

90களில் முன்னணி நடிகர்களில் பிரசாந்தும் ஒருவர். வைகாசி பொறந்தாச்சுவில் அறிமுகம் ஆகிய அவர் தொடர்ந்து செம்பருத்தி, வன்ண வண்ண பூக்கள், திருடா திருடா ஜீன்ஸ் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார். ஆனால் இவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தினால் அவரது சினிமா கேரியரில் கவனம் செலுத்த முடியமல் போனார். இதனால் அவ்ர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான அந்தகன் அவருக்கு ரீ என்ட்ரியாக […]

praasanth

90களில் முன்னணி நடிகர்களில் பிரசாந்தும் ஒருவர். வைகாசி பொறந்தாச்சுவில் அறிமுகம் ஆகிய அவர் தொடர்ந்து செம்பருத்தி, வன்ண வண்ண பூக்கள், திருடா திருடா ஜீன்ஸ் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார். ஆனால் இவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தினால் அவரது சினிமா கேரியரில் கவனம் செலுத்த முடியமல் போனார். இதனால் அவ்ர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான அந்தகன் அவருக்கு ரீ என்ட்ரியாக அமைந்தது. தொடர்ந்து விஜயுடன் கோட் படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் அந்த படம் துவங்கபடவில்லை. இந்த நிலையில் பிரசாந்த் சமீபத்தில் இயக்குனர் ஹரி மீது ஒரு புகார் அளித்தர். அதில் தனது படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை மற்றும் படத்திற்கான ப்ரி புரொடக்சனுக்கா செலவு செய்த பணம் இரண்டையும் தரவேண்டும் என்று கூறியிருந்தார். இதன் மூலமே இந்த படம் நிறுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் ஹை பிரசாந்த் படம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரசாந்த் சமீபகாலமாக உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். ஆனால் ஹரி தனது படத்திற்காக உடல் எடையை குறைக்க சொன்னாராம். ஆனால் பிரசாந்தால் அது முடியாமல் போகவே இந்த படம் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்று வலைப்பேச்சு சேனலில் கூறினர்.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →