Cinema News
லேடி சூப்பர்ஸ்டாருக்கு இந்த நிலைமையா..? தொழிலால் சறுக்கிய கேரியர்.. கடுப்பில் இருக்கும் விக்னேஷ் சிவன்..!
Nayanthara: லேடி சூப்பர்ஸ்டார் என தமிழ் சினிமாவில் வலம் வந்த நயன்தாரா. கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டார். அங்கு சறுக்க தொடங்கியது அவர் வாழ்க்கை என்கின்றனர் ரசிகர்கள்.
உச்சத்தில் இருக்கும் இருக்கும் போது திருமணம் செய்து கொண்ட எவ்வளவு பெரிய நாயகிகள் என்றாலும் அவர்களின் மார்க்கெட் கண்டிப்பாக அடி வாங்கும். ஆனால் நயன் தன் திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவானார்.
இதையும் படிங்க: இப்படி நான் பேச மாட்டேன்!. வடிவேலு நடிக்க மறுத்த சூப்பர் காமெடி!.. அப்புறம் அவர் சொல்லிதான் நடிச்சாராம்!..
அதுவே சமூக வலைத்தளம் முழுவதும் பேசு பொருளானது. வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் அஜித்தினை இயக்க இருந்த படமும் கைநழுவி சென்றது. இது அவருக்கு பெரிய அடியாக மாறியது. அதே நேரத்தில் த்ரிஷாவின் வளர்ச்சி முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை மிஸ் செய்தார் நயன்.
பல வருடங்களுக்கு முன்னர் ஓகே செய்த ஜவான் சரியான நேரத்தில் ரிலீஸாக தற்போது சில பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்கிறதாம். சரி படம் தான் இப்படி போச்சு என்பதால் தன் கணவருடன் இணைந்து 9ஸ்கீன் என்ற அழகுசாதன வெப்சைட்டை தொடங்கினார். அதற்கு ப்ரோமோஷனே பலமாக இருந்தது.
இதையும் படிங்க: பாக்கியராஜின் ஹிட் படத்தில் நடித்து இருக்கிறாரா அவர் முதல் மனைவி… அவர் இறந்ததுக்கும் காரணம் இதுதானா?
அடுத்த சில நாட்களில் ஃபெமி9 என்னும் பெண்களுக்கான நாப்கின் பிசினஸையும் தொடங்கினார். வரிசையாக பல கோடி முதல் போட்டு தொழிலை தொடங்கினாலும் மிகப்பெரிய வரவேற்பை பெற முடியவில்லையாம். இதனால் பல கோடி நஷ்டமாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறதாம்.
இதில் கடுப்பான விக்னேஷ் சிவன் இப்படியே போனால் இருக்கும் பெயரும் காலி ஆகிவிடும் என்பதால் நயனை சினிமாவில் கவனம் செலுத்தும்படி கண்டிஷனே போட்டு இருக்கிறாராம். தொழிலை அவர் பார்த்து கொள்வதாக சொல்லி இருப்பதாகவும் இனி நயன் சினிமாவில் பிஸியாவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.