அஜித்தை தவிற வேறெந்த நடிகரும் அத செய்யல! இம்பிரஸ் ஆன கிரண்.. அதிலிருந்தே அவர் ஸ்பெஷல்தான்

Published on: February 29, 2024
kiran
---Advertisement---

Actress Kiran: ஜெமினி படத்தில் ‘தீவானா தீவானா’ பாட்டை யாராலதான் மறக்க முடியும்? 18 வயது இளமங்கையாக ஒரு அழகான தேவதையாக அந்த படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை கிரண். பப்ளியாக மாநிறத்தில் யாருப்பா இந்த நடிகை? எங்கு இருந்த பிடிச்ச? என்பது போல் வாயடைக்க வைத்திருப்பார் கிரண். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார் கிரண்.

துரு துருவென நடிப்பால் ரசிகர்களை சொக்க வைத்த கிரண் அடுத்ததாக வின்னர், வில்லன் , அன்பே சிவம் என பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். கோலிவுட்டில் அடுத்த கனவுக்கன்னி இவர்தான் என்றளவுக்கு பேர் வாங்கினார் கிரண். தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹிரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவில் இருந்தே ஒதுங்கினார்.

இதையும் படிங்க: அய்யா, ஏற்கனவே அவர் பல்ப் தான் வாங்கிட்டு இருக்காரு.. அடுத்த ஆட்டை ரெடி செய்த அனிமல் இயக்குனர்..

அப்படியே திரும்பி பார்த்தால் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஆரம்பத்தில் கிரண் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. எப்படி இருந்த நடிகை? இந்தளவுக்கு இறங்கிட்டாரே என்றெல்லாம் சில ரசிகர்கள் கூறி வந்தார்கள். இன்னும் சிலர் ஏன் இவ்ளோ கவர்ச்சி என முகம் சுழித்தனர். ஆனாலும் கிரண் அதையெல்லாம் பற்றி கவலை கொள்வதில்லை.

சமீபத்தில் தமிழ் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் கிரண் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கூறி வருகிறார். அவருடைய அழகான கெஸ்ட் ஹவுஸை காட்டி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அந்த வீட்டில் அவரது சகோதரருடன் தான் கிரண் இருக்கிறாராம். அவ்வப்போது அவரது அம்மா மற்றும் அப்பா வந்து போவார்களாம். இப்பொழுதும் ஒரு சிறு குழந்தையாகவே மாறி அந்த பேட்டியை கொடுத்தார்.

இதையும் படிங்க: இது ஃபுல் மீல்ஸ் விருந்து போல!.. டிரிபிள் எக்ஸ் சைஸ் காட்டி இழுக்கும் ரேஷ்மா!..

அப்போது அன்பே சிவம் படத்தில் மேக்கப் அதிகமாக போட்டுக் கொண்டு வந்து நின்றாராம் கிரண். அதை பார்த்ததும் கமல் மோ மேக்கப்.. நோ லிப்ஸ்டிக் என டிஸ்யூ பேப்பரை எடுத்து அவரே முழுவதுமாக துடைத்துவிட்டாராம். மேலும் தமிழ் சினிமாவிலேயே குட் லுக்கிங் நடிகர் என்றால் அஜித்தான் என்று கிரண் கூறினார். அதுமட்டுமில்லாமல் ஹேண்ட்ஸம்மான ஹீரோ, நேர்மையான ஹீரோ இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் என்றும் கூறினார்.

தமிழ் நடிகர்களிலேயே என்னிடம் முதன் முதலில் ஹிந்தியில் சாட் செய்தது அஜித்தான். அதனால் அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல். மேலும் என் அம்மாவிடமும் நார்மலாக பேச ஆரம்பித்தார் என்றும் கிரண் கூறினார்.

இதையும் படிங்க: படத்தில் நடிப்பவர்கள் என்ன கொத்தடிமைகளா? தாங்கமுடியாத பாலாவின் அடாவடிகள்.. இவ்ளோ பேரா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.