முதல் சந்திப்பிலேயே பஞ்சுவை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நாகேஷ்! தரமான காமெடியைப் பாருங்க!
இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான சர்வர் சுந்தரம் எப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அந்த படத்திற்கு முன்பே கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் நாகேஷ் நடிப்பதாக இருந்தது. அதற்காக தங்களைப் பார்க்க வரும்படி கிருஷ்ணன் பஞ்சு நாகேஷூக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களது அழைப்பை ஏற்று நாகேஷ் அவர்களை சந்திப்பதற்காகப் போய்க் கொண்டு இருந்தார். அப்போது, அவரை ஏற்றிக் கொண்டு போன காரின் டிரைவர் கிருஷ்ணன் பஞ்சு எப்படிப்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். […]

இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான சர்வர் சுந்தரம் எப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அந்த படத்திற்கு முன்பே கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் நாகேஷ் நடிப்பதாக இருந்தது. அதற்காக தங்களைப் பார்க்க வரும்படி கிருஷ்ணன் பஞ்சு நாகேஷூக்கு அழைப்பு விடுத்தனர்.
அவர்களது அழைப்பை ஏற்று நாகேஷ் அவர்களை சந்திப்பதற்காகப் போய்க் கொண்டு இருந்தார். அப்போது, அவரை ஏற்றிக் கொண்டு போன காரின் டிரைவர் கிருஷ்ணன் பஞ்சு எப்படிப்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். சந்திரபாபுவே அவரைப் பார்த்தா ஆடுவாரு. அப்படிப்பட்ட டெரர் அவங்க இருவரும் என்றனர். அதைக் கேட்ட உடனே ஆடிப்போன நாகேஷ் முதல் சந்திப்பிலேயே ஏதாவது செய்து, பஞ்சுவை அசத்திவிட வேண்டும் என்று அங்கேயே முடிவு செய்தார்.
அப்போது ஸ்டூடியோவுக்குள் போய் கார் நின்றது. காரில் இருந்து இறங்கிய நாகேஷ் செட்டுக்குள் போனார். உள்ளே போனவருக்கு பஞ்சு யாருன்னு தெரியல. ஏன்னா அவங்க இரண்டு பேரையும் இதுக்கு முன்னால இவரு பார்த்தது இல்லை. அப்போ, மாருதிராவ், மாருதிராவ்…னு ஒருவர் சத்தம் போட்டார். பஞ்சு கூப்பிடுறார் என்றார் இன்னொருத்தர். அதில் இருந்து பஞ்சு யாருன்னு தெரிந்துகொண்ட நாகேஷ் நேராக அவர் பக்கத்தில் போனார். பஞ்சுவைப் பொருத்தவரைக்கும் என்ன பழக்கம்னா அவர் சட்டைப் பொத்தானை என்னைக்கும் போட மாட்டார்.
அவர் அருகில் போன நாகேஷ், நேராக நிமிர்ந்து பஞ்சுவைப் பார்க்கல. குனிந்து தரையில ஏதோ தேடிக்கொண்டு இருந்தார். அவரைப் பார்த்த பஞ்சு, கீழே குனிஞ்சு என்ன தேடுற என்று கேட்டார். அதற்கு, உங்க சட்டையில உள்ள 6 பொத்தானையும் காணோம். அதான் கீழே குனிஞ்சு எங்கே விழுந்துருக்குன்னு தேடுறேன் என்றார் நாகேஷ். இவர் சொன்னதைக் கேட்ட உடனே, குபீர் என்று சிரித்து விட்டார் பஞ்சு. அன்னையில இருந்து இவர்கள் இருவரும் நெருக்கமான நட்பு உருவானது. அது கடைசி வரை தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.












