Connect with us
vijay 4

Cinema News

சிவாஜி, கமல், ரஜினி கூட நடிச்சு கிடைக்காத மரியாதை… விஜய் கூட நடிச்சு கிடைச்சது! யாருப்பா அது?

Actor Vijay: சிவாஜியுடன் 33 படங்கள், ரஜினி, கமல் இவர்களுடன் 15 படங்கள் நடித்து கிடைக்காத மரியாதை விஜய்யுடன் சேர்ந்து நான்கு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன், அதன் பிறகு தான் எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்தது என ஒரு பிரபல மூத்த நடிகர் சொன்ன செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .

கோலிவுட்டில் ஒரு மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இன்று அவர் தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் .சினிமாவில் எப்படி ஒரு பெரிய ஆளுமையாக இருக்கிறாரோ அதைப்போல அரசியலிலும் தனது முத்திரையை பதிக்க காத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணமாக இருந்தது அவரா? ஆனா வெளியே ஏன் தெரியல…?!

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்திருக்கும் விஜய் அடுத்ததாக எச் வினோத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார் விஜய்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலை நேரடியாக எதிர் கொள்ள இருக்கிறார். சமீபத்தில் தான் அவர் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து ஒட்டுமொத்த தொண்டர்களுக்கும் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க: விஜயிடம் போனில் பேசிய அஜித்!.. தளபதியிடம் தல சொன்னதுதான் ஹலைட்!….

இந்த நிலையில் நடிகர் விஜய் பற்றி பிரபல மூத்த நடிகர் ஒய் ஜி மகேந்திரன் கூறியது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. ஒய் ஜி மகேந்திரனின் பேரன் விஜயின் மிக தீவிர ரசிகரரம். விஜய் படங்களில் நடித்த பிறகுதான் தன்னை ஒரு நடிகன் என்றே அவன் நம்பினான் என தன் பேரனை பற்றி ஒய் ஜி மகேந்திரன் கூறியிருக்கிறார்.

ygm

ygm

சிவாஜியுடன் 33 படங்கள் நடித்திருக்கிறேன். ரஜினியுடன் 15 படங்கள், கமலுடன் 15 படங்கள் நடித்திருக்கிறேன். அதுவரை  நான் ஒரு நடிகன் என்ற ஒரு மரியாதையை என் பேரன் எனக்கு கொடுத்ததே இல்லை. விஜய்யுடன் நான்கு படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தான் எனக்கு அவனிடமிருந்து மரியாதையே கிடைத்தது. அதுவும் கோட் திரைப்படத்தில் நான் கூறிய அந்த வசனத்தை டிரெய்லரில் பார்த்த பிறகு என்னை பெரிய அளவில் கவனித்து வருகிறான் என்றும் ஒய் ஜி மகேந்திரன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்தின் ஹைலைட்டே அதுதான்! நீளமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. பிரசாந்த் சொல்றத கேளுங்க

google news
Continue Reading

More in Cinema News

To Top